புதுச்சேரி

கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

குடும்ப தகராறில் 2 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

திருபுவனை

குடும்ப தகராறில் 2 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

2 மாத கர்ப்பிணி

திருபுவனை பெரியபேட் பகுதியை சேர்ந்தவர் தனஞ்செழியன் (வயது 45). இவரது மகள் சந்தியா (24). இவருக்கும், திருவண்டார்கோவில் சின்னபேட் பகுதியை சேர்ந்த தினேஷ்குமாருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

தினேஷ்குமார் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது சந்தியா 2 மாதம் கர்ப்பமாக இருந்தார். அங்குள்ள அழகு நிலையத்தில் அவர் வேலை செய்து வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தியா, வீட்டில் ஒரு அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாசில்தார் விசாரணை

சந்தியா சாவு குறித்து அவரது தாயார் அருணா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான 5 ஆண்டுகளில் சந்தியா தற்கொலை செய்துகொண்டதால், அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்று தாசில்தார் விமலன் விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்ப தகராறில் 2 மாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு