புதுச்சேரி

மத்திய சிறையில் பிளேடை விழுங்கி பிரபல ரவுடி தற்கொலை முயற்சி

காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் பிரபல ரவுடி பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.

தினத்தந்தி

புதுச்சேரி

காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் பிரபல ரவுடி பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.

குண்டர் சட்டம்

புதுவை சின்ன கொசப்பாளையத்தை சேர்ந்தவர் ரிஷிகுமார் (வயது 23). பிரபல ரவுடி. இவர் மீது அடிதடி, கஞ்சா உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

இதைத்தொடர்ந்து உருளையன்பேட்டை போலீசார் கடந்த 5 மாதங்களுக்கு முன் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து காலாப்படடு மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் செல்போன்

இந்தநிலையில் சிறையில் ரிஷிகுமார் செல்போன் பயன்படுத்துவது சிறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் ஜெயில் வார்டன்கள் அவரது அறையில் சோதனை நடத்தி செல்போனை பறிமுதல் செய்தனர்.

சிறையில் இருந்தபடியே செல்போன் மூலம் நண்பர்களை தொடர்புகொண்டு, வழக்கு விசாரணைக்கு கோர்ட்டுக்கு செல்லும்போது, கஞ்சாவை வரவழைத்து அவர் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிளேடை விழுங்கினார்

இந்தநிலையில் இன்று சிறையில் இருந்த ரிஷிகுமார், முகத்தை சவரம் செய்வதற்கு வைத்திருந்த பிளேடை உடைத்து விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த சிறை வார்டன்கள், உடனடியாக அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரிஷிகுமார் இதேபோல் பிளேடை விழுங்குவது, பிளோடல் உடலை கிழித்துக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். உருளையன்பேட்டை போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தபோதுகூட அவர் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து