புதுச்சேரி

அதிக தேர்ச்சி காட்டிய பள்ளிக்கு கேடயம்

மாவட்ட அளவில் தேர்ச்சி விழுக்காடு காட்டிய பள்ளிகளுக்கு கேடயத்தை அமைச்சா சந்திரபியங்கா வழங்கினா.

காரைக்கால்

காரைக்கால் பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். நாஜிம் எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்து கொண்டு, சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகள், மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி விழுக்காடு காட்டிய பள்ளிகளுக்கு கேடயம், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகளும், வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் குணாளன், பொதுச் செயலாளர் காளிதாசன், காரை மாவட்ட பெற்றோர் சங்க தலைவர் சோழசிங்கராயர், பொதுச் செயலாளர் செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் சிங்காரவேல் நன்றி கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்