பெங்களூரு

காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

ஸ்ரீரங்கப்பட்டணா காவேரி ஆற்றிற்கு குடும்பத்துடன் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

மண்டியா:

பெங்களூரு எலகங்காவை சேர்ந்தவர் அசோக் (வயது 26). நேற்று இவர், தனது குடும்பத்தினருடன் காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை செய்வதற்காக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு சென்றார். அங்கு அசோக், காவிரி ஆற்றங்கரையோரம் குளித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அசோக் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை, குடும்பத்தினரால் காப்பாற்ற முடியவில்லை..

இதுகுறித்து ஸ்ரீரங்கப்பட்டணா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினருடன் சென்ற போலீசார் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அசோக்கின் உடலை மீட்டனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஸ்ரீரங்கப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது