புதுச்சேரி

புதுவையில் பரபரப்பான மிஷன் வீதியில் படுத்தபடி மது அருந்திய டிப்-டாப் ஆசாமி

புதுவையில் மிஷன் வீதியில் படுத்தபடி மது அருந்திய டிப்-டாப் ஆசாமியின் போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை என்றால் மிக கொண்டாட்டம்தான். வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுவையில் அதிகமாக வருவர். புதுவையில் கிடைக்கும் விதவிதமான மதுவை வாங்கி அருந்துவர். அதேபோல் மதுவுக்கு ஆசைப்பட்டு முதியவர் ஒருவர் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட், பெல்ட், தொப்பி, கண் கண்ணாடி அணிந்து வந்திருந்தார்.

பரபரப்பான மிஷன் வீதியில் மூடியிருந்த கடை முன்பு பிளாஸ்டிக் விரிப்பை விரித்து, கவிழ்ந்து படுத்து கொண்டு கண்ணாடி டம்ளரில் மதுவை ஊற்றினார். பின்னர் சைடிஷ் வைத்துக்கொண்டு ஜாலியாக படுத்துக் கொண்டே மது அருந்தினார்.

பரபரப்பாக காணப்படும் வீதியை பற்றி கவலையின்றி தனக்குள்ளே பேசி கொண்டு அவர் மது குடிப்பதை அவ்வழியே சென்ற ஒருவர் போட்டோ எடுத்து பதிவிட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்