மும்பை

புனேயில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது; விமானி உள்பட 2 பேர் படுகாயம்

புனேயில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்

தினத்தந்தி

புனே, 

புனே மாவட்ட பகுதியில் நேற்று ரெட்பேர்டு என்ற தனியார் விமான பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த குட்டி விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தது. விமானியுடன் மேலும் ஒருவரும் விமானத்தில் இருந்தார். மாலை 5 மணியளவில் பாராமதி தாலுகா கத்பல் கிராமப்பகுதியில் விமானம் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென விமானம் விபத்தில் சிக்கி தரையில் முட்புதரில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த விமானி உள்பட 2 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சென்ற மீட்பு படையினர் விமான விபத்தில் காயமடைந்த விமானி உள்பட 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானம் விழுந்து ஏற்பட்ட விபத்தால் பாராமதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது