புதுச்சேரி
மணவெளி ரோஜா நகரை சேர்ந்தவர் ரபீக். இவரது மகள் அபிதா (வயது 17), கடந்த 14-ந் தேதி இரவு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அருகில் உள்ள இடங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து திருக்கனூர் போலீசில் ரபீக் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான அபிதாவை தேடி வருகின்றார்