ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள காங்குழி கிராமம் காமராஜர் நகரை சேர்ந்த பழனிவேலின் மகன் செல்லதுரை(வயது 30). இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டயப்படிப்பு படித்துவிட்டு, கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், 13 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென சிறுமி மாயமானார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்பேரில், சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்றதாக செல்லதுரை மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.