சினிமா துளிகள்

முதல் முறையாக வாழ்த்து கூறிய அமீர்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அமீர் முதல் முறையாக வாழ்த்துக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான அமீர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு, இதுவரை பொதுவெளியில் யாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லாத நான், சமூகநீதிக் காவலரின் வாரிசுக்கு முதன் முறையாக இதயம் திறந்த வாழ்த்து மடல்.

சூரிய நெருப்பில் உதித்து..
காரிய இருளைத் தகர்த்து..
ஆருடத்தை பொய்யாக்கி
ஆரியத்தை பொடியாக்கி..

ஆட்சிக் கட்டிலை
அடித்தட்டு மக்களுக்கே..
அர்ப்பணித்த
இந்திய முதல்வனே..!

இன்னும் பல காலம் நீயிருக்க
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன் அது
காலத்தின் தேவை..

சமூக நீதி தழைக்க..
சமய நீதி ஓழிக்க..
சமுதாயம் செழிக்க..
சனநாயகம் சிறக்க..


அன்புடன்
அமீர்

என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது