பாலிவுட் நடிகர் அமீர்கான் 'லால் சிங் சாட்டா' படத்தில் நடித்து வருகிறார். அத்வைத் சந்தா இயக்கும் இந்தப் படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் படுகிறது. அமீர்கானுக்கு அவரது மகளால் தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கிறது. மகள் ஈராகான் அவ்வப்போது சமூக ஊடகத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுவார்.
இந்த நிலையில் ஈராகான் தனது தோழி ஒருவருடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். நீச்சல் உடையில் கிளாமராக இருக்கும் ஈரா கானை பலரும் விமர்சித்து வருகிறார்கள். வசதி படைத்தவராக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா என்று கேட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.