மாவட்ட செய்திகள்

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்,

வட மாநிலங்களில் ராமநவமி ஊர்வலங்களின் போது நடத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணி மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேக்தாவூது தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான், மாநில செயற்குழு உறுப்பினர் நூர்ஜியாவுதீன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சஹீத் கண்டன கோஷமிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின், பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், ராசிக்ரகுமான், எஸ்.டி.பி.ஐ. கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல்ஜமீல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நகர் தலைவர் முகமது கனி நன்றி கூறினார்.