மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்தது; டிரைவர் படுகாயம்

பாலமேடு அருகே லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

அலங்காநல்லூர்,

கரூர் மாவட்டத்தில் இருந்து ஒரு டேங்கர் லாரி வலையபட்டியை கடந்து மதுரைக்கு செல்ல முயன்றது. இந்த லாரி வரும் வழியில் எல்கை பாறை மலை பகுதியை கடந்து சென்ற போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் ரத்தினவேலு (வயது 31) காயம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்த பாலமேடு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கவிழ்ந்த டேங்கர் லாரியை கிரேன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இச்சம்பவத்தால் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டு அதன் பின்னால் சீரானது. இது குறித்து பாலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.