இந்த படத்தில், விக்ரம் மூன்று வேடங்களில் நடிக் கிறார். அதில், துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடமும் ஒன்று. அந்த வேடத்துக்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெறுகிறது.
இந்த படத்தில், கதாநாயகியாக ரிதுவர்மா ஏற்கனவே நடித்து வந்தார். இப்போது, இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து இருக்கிறார். படத்தில், இவர்தான் முக்கிய கதாநாயகி என்கிறார்கள்.
அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற இருக்கிறது. சில முக்கிய காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளன. இந்த ஆண்டின் மிக பிரமாண்டமான திகில் படமாக துருவ நட்சத்திரம் இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்!