மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஒன்றிய பகுதிகளான வேங்கிக்கால், நொச்சிமலை, பவித்ரம், பெரியகல்லபாடி, காட்டாம்பூண்டி ஆகிய கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் பணிகள், ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் வழங்கும் பணிகள், பிரதமர் வீடு வழங்கும் திட்ட பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.

பவித்ரம் ஊராட்சி சமத்துவபுரம் மற்றும் காட்டாம்பூண்டி ஊராட்சியில் அடர்காடு அமைக்கும் பணிகளை பார்வையிட்டு மரக்கன்று நட்டார்.

அதைத் தொடர்ந்து அவரது தலைமையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாச்சலம், அமிர்தராஜ் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.