மாவட்ட செய்திகள்

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பெட்ரோல் விற்பனை மூலம் ரூ.125 கோடி கூடுதல் வரி வசூல்

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மாநில அரசுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் ரூ.125 கோடி கூடுதல் வரி வசூலாகி உள்ளது.

மும்பை

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மாநில அரசுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் ரூ.125 கோடி கூடுதல் வரி வசூலாகி உள்ளது.

மத்திய அரசு கடந்த நவம்பர் 8ந்தேதி புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. ஆனால் அந்த நோட்டுகள் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் செல்லும் என கூறப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த 500, 1,000 நோட்டுகளை பெட்ரோல் பங்குகளில் போட்டி போட்டுக்கொண்டு மாற்றினர்.

இதனால் கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் மாநில அரசுக்கு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் மதிப்பு கூட்டு வரி அதிகளவு கிடைத்துள்ளது.

இது குறித்து விற்பனை வரித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, வழக்கமாக மாநில அரசுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மாதந்தோறும் ரூ.1,300 கோடி மதிப்பு கூட்டு வரியாக கிடைக்கும். ஆனால் நவம்பர் மாதம் ரூ.125 கோடி அதிகம் கிடைத்துள்ளது என்றார்.