சினிமா துளிகள்

அதர்வாவுடன், ஸ்ரீதிவ்யா!

‘இமைக்கா நொடிகள்’ படத்தை அடுத்து அதர்வா நடித்து வரும் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து இருக்கிறார்.

தினத்தந்தி

சில பல கதாநாயகிகளின் போட்டிக்கு மத்தியில், இந்த படத்தை ஸ்ரீதிவ்யா கைப்பற்றி இருக்கிறார். தினேஷ் கார்த்திக் தயாரிக்க, பர்னேஷ் டைரக்டு செய்திருக்கிறார். ஒரு கலைக்கல்லூரியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

அஞ்சாதே பட புகழ் நரேன், ஆசிஷ் வித்யார்த்தி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் வருகிறார்கள். ஜஸ்டிஸ் பிரபாகர் இசையமைக்க, ராமலிங்கம் ஒளிப்பதிவில், பர்னேஷ் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார். இவர் கூறும்போது, இந்த படம், ஒரு கலைக்கல்லூரியில் நடக்கும் மர்மமான சம்பவங்களின் அடிப்படையில் உருவான கதை. அதனால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதில் காதல் இருக்கிறது. பகை இருக்கிறது. வன்மம் இருக்கிறது. தோழமை இருக்கிறது. இந்த படம், அத்தனை உணர்வுகளும் ஒருங்கிணைந்த படமாக இருக்கும் என்கிறார்!

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி