கணபதி,
வியாபாரி மனைவி
கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 55). எலெக்ட்ரீசியன். அவருடைய மனைவி சுசீலா (50). இவர்களது மகள் பிரபா (வயது 23). பிரபாவுக்கும் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
கோபால் உடுமலைப்பேட்டையில் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கர்ப்பமடைந்த பிரபா பிரசவத்திற்கு தன் தாய் வீடான சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வந்தார். அவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையே பிரபா தன் கணவர் வீட்டுக்கு செல்வதாகவும், நீங்கள் விரைவில் என்னை கணவர் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்றும் பெற்றோரிடம் கூறி வந்ததாக தெரிகிறது. நேற்று காலை பிரபா தனது தாயாரிடம் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைக்க வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் கைக்குழந்தையை வைத்து கஷ்டப்பட வேண்டாம். இன்னும் 2 மாதங்கள் கழித்து அனுப்பி வைக்கிறோம் என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த பிரபா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவருடைய உடல் முழுவதும் கருகியது. அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரபாவை பரிசோதனை செய்தார். அப்போது பிரபா இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து பிரபாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருகின்றனர்.