புதுச்சேரி

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு ஆழ்கடலில் பேனர் வைத்த தொண்டர்கள்

ஆழ்கடலில் முதல்-மந்திரி ரங்கசாமிக்கு பேனர் வைத்து அவரது தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகஸ்ட் 4-ந்தேதி(நாளை) தனது 73-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ரங்கசாமியின் தொண்டர்கள் விதவிதமான பேனர்களை வைத்தும், நலத்திட்ட உதவிகளை செய்தும் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு திரைப்பட கதாநாயகர்களைப் போன்று ரங்கசாமியை சித்தரித்து நகர்ப்பகுதி முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயிலர், வீரசிம்மரெட்டி உள்ளிட்ட கதாபாத்திரங்களைப் போல் ரங்கசாமியை சித்தரித்து பேனர்களை வைத்துள்ளனர்.

இதே போல் ஆழ்கடலில் முதல்-மந்திரி ரங்கசாமிக்கு பேனர் வைத்து அவரது தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சிலர் பேனரை பிடித்து ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ தற்போது புதுச்சேரியில் வைரல் ஆகி வருகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்