அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் டி.ஆர். தர்மராஜை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றபோது 
மாவட்ட செய்திகள்

புள்ளம்பாடி ஒன்றியத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினருடன் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

லால்குடி தொகுதி அ.தி.மு.க. கூட்டணி த.மா.கா. வேட்பாளர் டி.ஆர்.தர்மராஜ் கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

லால்குடி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வேட்பாளர் டி.ஆர்.தர்மராஜ் நேற்று முன்தினம் இரவு தனது சொந்த கிராமமான நகரிலும், புள்ளம்பாடி ஒன்றியத்தில் குமுளூர், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, வெள்ளனூர், இடங்கிமங்கலம், ராமநாதபுரம், இருதயபுரம், வெங்கடாசலபுரம், கோவண்டாகுறிச்சி, புதூர்பாளையம், வாண்ராம்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், திண்ணகுளம், ஆலம்பாடி மேட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், புள்ளம்பாடி-திருமழபாடி சாலையிலுள்ள ரயில்வே குறுக்குச்சாலையில் மேம்பாலம் அமைக்கவும்,

புள்ளம்பாடியில் இருந்து செங்கரையூர் வரை உள்ள சாலையை இருவழி சாலையாக மாற்றவும், இந்த பகுதியில் முழுநேர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், பாடுபடுவேன் எனவும், தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்திட அனைவரும் இரட்டைஇலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

உடன் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், ராஜாராம், நகர செயலாளர்கள் ஜேக்கப் அருள்ராஜ், பிச்சைபிள்ளை, ஒன்றிய கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ஜெனிபர் ஜெனீவா ஹென்றி பிரபா, ஒன்றிய நிர்வாகிகள் அருணகிரி, கோவிந்தசாமி, ஜெயக்குமார், பாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வமேரி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சதானந்தம், குமார், டாஸ்மாக் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட ஒன்றிய நகர கிளைக்கழக அ.தி.மு.க., பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.