புதுச்சேரி

விமான நிறுவன ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்

தனியார் விமான நிறுவன ஊழியரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி

தனியார் விமான நிறுவன ஊழியரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விமான நிறுவன ஊழியர்

புதுவை கோரிமேடு குருநகரை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 30). இவர் திருப்பதியில் தனியார் விமான நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை ஊழியராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலையில் அவர் பஸ் மூலம் புதுவை வந்தார்.

ராஜீவ்காந்தி சதுக்கம் பகுதியில் பஸ்சை விட்டு இறங்கிய அவர் தனது சகோதரர் செல்வகுமாருக்கு (28) போன் செய்து தன்னை அழைத்து செல்லும்படி கூறினார். செல்வகுமார் அங்கு வந்ததும் இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தனர்.

சரமாரி தாக்குதல்

அப்போது அங்கு குடிபோதையில் வந்த செல்லபெருமாள்பேட்டை சேர்ந்த பழனிமுருகன் (21), லாஸ்பேட்டை பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிஷோர் (19) ஆகியோர் கிருஷ்ணகுமார், செல்வகுமார் ஆகியோர் மீது விழுந்துள்ளனர். இதை அவர்கள் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்து கிருஷ்ணகுமார், செல்வகுமார் ஆகியோரை சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்துவிட்டு ஓடிவிட்டனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த சகோதரர்கள் 2 பேரும் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு