சினிமா துளிகள்

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நெல்சன் - ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

தினத்தந்தி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கைவசம் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் ரிபப்ளிக், பீம்லா நாயக் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் உடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்