மும்பை

எத்தனை முறை அழைத்தாலும் துணை முதல்-மந்திரி பதவி ஏற்க அஜித்பவார் தயாராக இருப்பார்; முன்னாள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கிண்டல்

எத்தனை முறை அழைத்தாலும் துணை முதல்-மந்திரி பதவி ஏற்க அஜித்பவார் தயாராக இருப்பார் என முன்னாள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கூறியுள்ளார்.

மும்பை, 

எத்தனை முறை அழைத்தாலும் துணை முதல்-மந்திரி பதவி ஏற்க அஜித்பவார் தயாராக இருப்பார் என முன்னாள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கூறியுள்ளார்.

துணை முதல்-மந்திரி பதவி

மராட்டியத்தில் 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய இருந்தது. அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் அதிகாலை நேரத்தில் தேவேந்திர பட்னாவிஸ்சை முதல்-மந்திரியாகவும், துணை முதல்-மந்திரியாக அஜித்பவாருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்து அதிர்ச்சி கொடுத்தவர் முன்னாள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி. அதிகாலை பதவி பிரமாணம் செய்து வைத்தது தொடர்பாக பகத்சிங் கோஷ்யாரி நேற்று முன்தினம் அளித்த பேட்டி ஒன்றின் போது கூறியதாவது:- நீங்கள் அஜித்பவாரை எத்தனை முறை துணை முதல்-மந்திரி பதவி ஏற்க அழைத்தாலும், அத்தனை முறையும் அவர் துணை முதல்-மந்திரியாக தயாராக இருப்பார். அதிகாலை பதவி ஏற்புக்காக சில நேரம் அவரை நினைத்து பரிதாபப்பட்டு இருக்கிறேன். எனினும் அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. கட்சி அவரது கட்டுப்பாட்டில் தான் இருந்தது. பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். சரத்பவாரை பொருத்தவரை எல்லேரும் அவரை மதிக்கின்றனர். ராஜ் பவனுக்கு வரும் போது, என் மனதுடன் பேசிவிட்டு செல்வார். தனிப்பட்ட முறையில் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் வருத்தம்

இதற்கிடையே முதல்-மந்திரி பதவியை 2 முறை தேசியவாத காங்கிரஸ் தலைமை விட்டு கொடுத்துவிட்டதாக அஜித்பவார் வருத்தம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் பாராமதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "2004-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. அப்போதே தேசியவாத காங்கிரசுக்கு முதல்-மந்திரி பதவி கிடைத்து இருக்க வேண்டும். இதேபோல 2019-ல் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் 2 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியை பெற்றிருக்க வேண்டும்" என்றார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்