சினிமா துளிகள்

அஜித் படம், சீனாவில் வெளியாகுமா?

போனிகபூர் தயாரித்து, அவருடைய மனைவி நடிகை ஸ்ரீதேவி நடித்த `மாம்' படம், சீனாவில் வெளியிடப்பட்டது.

`மாம்' படம் அங்கு வெற்றிகரமாக ஓடி, 16 மில்லியன் டாலர் வசூல் செய்தது. அதைத்தொடர்ந்து அஜித் நடித்த `நேர்கொண்ட பார்வை' படத்தையும் சீனாவில் திரையிடுவதற்கு போனிகபூர் முயற்சி செய்து வருகிறார்.

இந்த படம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இதுவரை அஜித் நடித்த படங்களை விட, `நேர்கொண்ட பார்வை' அதிக தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.