சினிமா துளிகள்

பீஸ்ட் படத்தை பார்த்த அஜித் குடும்பம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தை அஜித் குடும்பத்தினர் திரையரங்கில் கண்டு ரசித்தனர்.

தினத்தந்தி

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் - பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. ஏப்ரல் 13ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக அஜித் குடும்பத்தினர் வருகைதந்தனர். அஜித்தின் மனைவி ஷாலினி, தன் மகள் மற்றும் மகனுடன் சென்னை சத்யம் திரையரங்கில் கண்டுரசித்தார். அப்போது அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பீஸ்ட் திரைப்படத்தை காண அஜித் குடும்பத்தினர் வந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்