கோட்டுச்சேரி
காரைக்கால் நகர போலீசார் சந்தைத்திடல் மைதானத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த மாதேஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.