பெங்களூரு

மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதாவின் 3 வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்:எடியூரப்பா நம்பிக்கை

மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதாவின் 3 வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள் என எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் மற்றும் லெகர்சிங் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் நிர்மலா சீதாராமன் மற்றும் நடிகர் ஜக்கேஷ் வெற்றி பெறுவது உறுதி. லெகர்சிங்கை நாங்கள் 3-வது வேட்பாளராக களம் இறக்கியுள்ளோம்.

இதில் லெகர்சிங் உள்பட 3 பேரும் வெற்றி பெறுவது 100-க்கு 100 சதவீதம் உறுதி. நான் இன்று(நேற்று) முதல் பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறேன். கட்சி கூட்டங்களில் கலந்து கொள்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு