புதுச்சேரி

அம்பேத்கர் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும்

திருபுவனை பெரியபேட் பகுதியில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர்.

திருபுவனை

திருபுவனை பெரியபேட் பகுதியில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.