`போட்டோ ஷூட்' என்பது தற்போது நடிகைகளின் மிக முக்கிய பொழுது போக்காக மாறிவிட்டது. படவாய்ப்பு இல்லாத சூழலில் தங்களது அழகை விதவிதமாக புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவது நடிகைகளின் பழக்கம். ஆனால் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தாலும், கிடைக்கும் நேரங்களில் நடிகைகள் தற்போது `போட்டோ ஷூட்' நடத்தி வரு கிறார்கள்.
அந்தப் பட்டியலில் நடிகை ஆண்ட்ரியாவும் இடம் பெற்றிருக்கிறார். தமிழ் சினிமாக்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற அவர், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கடற்கரைக்கு சென்று ஜாலியாக பொழுதை கழிக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரைக்குச் சென்ற ஆண்ட்ரியா, பொங்கும் கடல் அலை பின்னணியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரது அழகை புகழ்ந்து வருகிறார்கள். உங்களது குரல் மட்டும் அழகல்ல...' என்று ஜில்லிப்பான விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். அதனால் குளிர்ந்து போயிருக்கிறாராம், ஆண்ட்ரியா.
அவர் தற்போது கா', மாளிகை', பிசாசு-2', நோ என்ட்ரி', வட்டம்' மற்றும் பெயரிடப்படாத 2 தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.