சினிமா துளிகள்

ரொமான்சுக்கு மாறிய ‘அண்ணாத்த’.... வெளியானது சர்ப்ரைஸ் அப்டேட்

ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் அண்ணாத்த. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது.

அப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது 2-வது பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, சாரக்காற்றே எனும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். ரஜினி - நயன்தாரா இடையேயான ரொமாண்டிக் பாடலாக இது படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஸ்ரேயா கோஷலும், சித் ஸ்ரீராமும் இணைந்து பாடி உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை