சினிமா துளிகள்

தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாசை மணக்க இருப்பதாக பேசப்பட்டது. பின்னர் ஐதராபாத் தொழில் அதிபர் ஒருவரை மணக்கப்போவதாக செய்திகள் வெளியானது.

தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும் தகவல் பரவியது. இதையெல்லாம் அனுஷ்கா மறுத்தார். எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றார்.

அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் ஒருவரை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக புதிய தகவல் தற்போது பரவி வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்