புதுச்சேரி

ஜிப்மரில் நர்சிங் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நடப்பு கல்வியாண்டுக்கான நர்சிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு ஜிப்மரில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தினத்தந்தி

புதுச்சேரி

 புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங்( 94-இடங்கள்), பி.எஸ்சி. அலைடு சயின்ஸ் (87) ஆகிய படிப்புகளுக்கு மொத்தம் 181 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும். அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்களை வருகிற 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியான மாணவர்களின் பட்டியல் வருகிற 16-ந் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். அக்டோபர் 4-ந் தேதியில் இருந்து வகுப்புகள் தொடங்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து