மாவட்ட செய்திகள்

மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர் நியமனம்

பிளஸ்-1, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

விருதுநகர்,

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- நடைபெற உள்ள மே 2022 பிளஸ்-1, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுப் பணிகளை மேற்பார்வையிட கீழ்கண்ட அலுவலர்கள் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.சென்னை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குனர் அமுதவல்லி விருதுநகர் மாவட்டத்துக்கும், சென்னை ஒருங்கிணைந்த பள்ளிகள் மாநில திட்ட இயக்ககம் இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி மதுரை மாவட்டத்துக்கும், மதுரை (கள்ளர் சீரமைப்பு) பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இணை இயக்குனர் செல்வராஜ் சிவகங்கை மாவட்டத்துக்கும், சென்னை தொடக்க கல்வி இயக்ககம்(நிர்வாகம்) துணை இயக்குனர் வெற்றிச்செல்வி ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.