சினிமா துளிகள்

தொடர் சாதனைகளை படைக்கும் அரபிக் குத்து பாடல்

ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் கொண்டாடி வந்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் புதிய இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது.

தினத்தந்தி

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை தொடர்ந்து முதல் பாடலான அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியிருந்த இந்த பாடலை அனிருத், ஜோனிட்டா காந்தி இருவரும் பாடியுள்ளனர். இந்நிலையில் அந்த பாடல் வெளியான 12 நாட்களிலேயே, யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை அசத்தியுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு