புதுச்சேரி

ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு

புதுவையில் வீட்டில் இருந்த படியே ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அவர்களது வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக 'ஜீவன் பிரதான்' திட்டத்தின் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பெமெண்ட்ஸ் வங்கி திட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்கள் வீட்டு வாசலிலேயே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். எனவே ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து