மாவட்ட செய்திகள்

தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது

வத்திராயிருப்பு அருகே வெடி விபத்து தொடர்பாக தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே வெடி விபத்து தொடர்பாக தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா வடுகப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட களத்தூர் கிராமத்தில் உள்ள ஆர்.கே. வி. எம். பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 1-ந் தேதி காலைவழக்கம்போல் தொழிலாளர்கள் பணியை மேற்கொண் டனர்.

அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டு 7-க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறி தரை மட்டமாயின.

இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகினர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து நத்தம்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலை யில் ஆலையின் உரிமையாளர் வழிவிடு முருகன் தலை மறை வானார்.

கைது

இந்தநிலையில் 3 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்த நிலையில் உரிமையாளர் வழிவிடு முருகனை கைது செய்து நத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.