தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் கருந்திரி பதுக்கி வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது43) என்பவரது வீட்டில் 200 குரோஸ் கருந்திரிகளும், செல்வராஜ் (40) என்பவரின் வீட்டில் 300 குரோஸ் கருந்திரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் அவர்கள் இருவரையும் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி கைது செய்தார்.