சினிமா துளிகள்

ரஜினி, சிம்புவுக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் களமிறங்கும் அருண் விஜய்

ரஜினியின் ‘அண்ணாத்த’, சிம்புவின் ‘மாநாடு’ ஆகிய படங்கள் தீபாவளியன்று ரிலீசாக உள்ள நிலையில், தற்போது அருண் விஜய் நடித்துள்ள படமும் இணைந்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்த றெக்க, ஜீவாவின் சீறு ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் ரத்தினசிவா. இந்த இரண்டு படங்களுக்கு முன்னர் அவர் இயக்கிய படம் வா டீல். அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்தது.

இந்நிலையில், இப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் தீபாவளியன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அருண் விஜய்யின் வா டீல் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்