சினிமா துளிகள்

அருண் விஜய்யின் ஓ மை டாக் டீசர்

சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் நடிப்பில் உருவாகி வரும் ஓ மை டாக் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர்.

நடிகர் அருண் விஜய் மகன் அர்னவுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 'ஓ மை டாக்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 29-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்