29

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; வெற்றி வாகை சூடினார் ஆஷ்லே பார்டி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

தினத்தந்தி

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்த டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா) அமெரிக்காவின் டேனிலே கோலின்ஸை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த போட்டியில், 6-3, 7-6 (7/2) என்ற செட் கணக்கில் வீழ்த்தி வாகை சூடினார். இதன்மூலம், 44 ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை சொந்த மண்னில் கைப்பற்றும் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியாவை சேர்ந்த 25 வயதான ஆஷ்லே பார்டி வெல்லும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து