சினிமா துளிகள்

அசோக்செல்வன், சாந்தனு படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

தினத்தந்தி

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்கும் புதிய படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி நடிக்கின்றனர். இப்படத்தை லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமிழழகன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்