பெங்களூரு

முறையாக மின்சாரம் வினியோகிக்க கூறிபெஸ்காம் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

முறையாக மின்சாரம் வினியோகிக்க கூறி பெஸ்காம் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு முறையாக மின்சாரம் வினியோகம் செய்யப்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி விவசாயிகள் புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சிட்லகட்டா டவுனில் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்த பெஸ்காம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தின்போது அவர்கள் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்தும், முறையாக மின்சாரம் வினியோகம் செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி பெஸ்காம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பெஸ்காம் மின்வாரிய அதிகாரியிடம் மனு கொடுத்தனர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்