மாவட்ட செய்திகள்

மது விற்பனையை தடுக்க சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; 3 பேர் கைது

திருவேங்கடம் அருகே மது விற்பனையை தடுக்கச் சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவேங்கடம்:

திருவேங்கடம் அருகே உள்ள கீழ திருவேங்கடத்தில் சட்ட விரோதமாக சிலர் மது பாட்டில்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவேங்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் அவர்களை பிடிக்க சென்றனர். அப்போது வடக்குப் பாறைபட்டியைச் சேர்ந்த ஆசீர்வாதம் மகன் முத்துராமன் (வயது 37), கீழ திருவேங்கடத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராமராஜ் (38), அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெபக்கனி (49) ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் கமலாதேவியை கீழே தள்ளிவிட்டு தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமன், ராமராஜ், ஜெபக்கனி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.