புதுச்சேரி

பெண் மீது தாக்குதல்

காரைக்கால் அருகே நிரவி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவதில் முன்விரோதத்தால் பெண் மீது தாக்குதல் நடத்தியவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நிரவி நடுஓடுதுறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுகி (வயது 30). அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜசேகர் (50). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே முன்விராதம் இருந்து வந்தது. நேற்று ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், மரக்கட்டையால் வாசுகியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது ஸ்கூட்டரையும் எரித்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை