புதுச்சேரி

தொழிலாளி மீது தாக்குதல்

தவளக்குப்பம் பிள்ளையார்திட்டு பகுதியை சேர்ந்தவரின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்து, கொலை மிரட்டல் விடுத்தவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

தவளக்குப்பம் பிள்ளையார்திட்டு பகுதியை சேர்ந்தவர் கோகுல்கிருஷ்ணன் (வயது33). பிளம்பர். இவர் நேற்று புதுவை நேருவீதி-பாரதி வீதி சந்திப்பு பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த அடையாளம் தெரியாத வாலிபர் கோகுல் கிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார்.

இதனை தட்டிக்கேட்ட கோகுல் கிருஷ்ணனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து: விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...