மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தல் பணிகள்: கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து 30 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள 30 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மண்டல அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் உள்ள 153 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல்-2026-ல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டரால் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாறன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், வருவாய் கோட்டாட்சியர்கள் பிரபு (தூத்துக்குடி), கௌதம் (திருச்செந்தூர்) மற்றும் அரசு துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.