மாத ராசிபலன்

மார்ச் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான மார்ச் மாத பலன்களை பார்ப்போம்.

மார்ச் மாதப்பலன்கள்

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே!

பொறுப்பு உணர்வு கொண்டவர்கள் நீங்கள். உயர்ந்த இலக்கினை எப்படியும் எட்டிப்பிடிப்பீர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்கள்

வேலைக்குச் செல்லும் உயர் அதிகாரிகள் மற்றும் உங்கள் சக பணியாளர்கள் உங்களுடன் சுமூகமாகவும் பழகி வருவதன் மூலம் உங்கள் பணிகளில் எவ்வித குறைபாடும் ஏற்பட வாய்ப்பில்லை. பணவரவு திருப்தி கொடுக்கும்.

வியாபாரிகள்

வியாபாரிகளுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். துணி வியாபாரம் மற்றும் பருத்தித் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் உயரும். முதலீடுகளை அதிகம் போடுவர். சிறிது அலைச்சல்கள் உண்டு.

குடும்பத் தலைவிகள்

குடும்ப நிர்வாகத்தில் உங்கள் பொறுப்புகளைச் மிகச் சிறப்பாக நிறைவேற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி வீட்டினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு பொற்காலமாக அமையும். அனைத்து கிரகங்களும் தங்களுக்குச் சாதகமாக உள்ளதால் குறிப்பாக கலைக்குரிய சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள்.

மாணவர்கள்

வகுப்பறையில் அநாவசியப் பேச்சை நிறுத்தி விடுவது தங்கள் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்க உதவும். அதனால், நல்ல உள்வாங்கும் திறன் கூடி மனதில் பதியும். மதிப்பெண்கள் அதிகம் பெற இந்நடவடிக்கை உதவும்.

பரிகாரம்

சனி காயத்ரி மந்திரம்

காகத் வஜாய வித்மஹே!

கட்க ஹஸ்தாய தீமஹி!!

தந்நோ மந்த ப்ரசோதயாத்!!

என்ற மந்திரத்தை சனி கிழமை காலை 6 மணி முதல் 7 மணிவரைக்குள் ஒன்பது முறை சொல்வதால் நன்மைகள் விளையும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே!

தங்களின் நகைச்சுவை உணர்வால் எல்லோரையும் மகிழ்விக்க முயற்சி செய்வீர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்கள்

சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் உங்கள் உயர் அதிகாரிகளின் பேரன்பையும் மதிப்பையும் பெற்று பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றைப் பெற்று இன்புறுவீர்கள்.

வியாபாரிகள்

வியாபாரிகளுக்கு தாங்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்திந்துத் துயரில் ஆழ்ந்திருந்த நீங்கள். தங்களுக்கு இப்போது இழந்த தொகை எல்லாம் திரும்பப் பெறுவதால் மனமகிழ்வீர்கள்.

குடும்பத் தலைவிகள்

திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறின்றி கவலைப்பட்டு வந்த தம்பதியருக்கு கருத்தரிக்க அதிக வாய்ப்புண்டு. இக்காலக் கட்டத்தில் நல்ல மருத்துவரிடம் சிகிட்சை மேற்கொள்ளலாம். நிச்சயம் பலனுண்டு.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு திரைப்பட தொடர்பில் இருக்கும் வழக்கமாக உள்ள தொடர்புகள் தொடர்ந்து வரும் என்பதிலும் சந்தேகமில்லை. படத்திற்காக முன் பணம் கிடைக்கப் பெறும்.

மாணவர்கள்

படிப்புக்காக வெளிநாடு சென்று படிக்க ஆர்வமிக்க மாணவர்களுக்கு அதற்குண்டான பரிட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே ஸ்காலர்ஷிப்பை பெற இயலும். ஆதலால், இப்போதிருந்தே அடிக்கடி பயிற்சி செய்து கொள்வது நலம்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு விரதம் மேற்கொண்டு ராகு கால நேரத்தில் துர்கா அஷ்டகம் படித்து எலுமிச்சம் பழ த்தில் விளக்கேற்றி வருவது தங்கள் வாழ்வின் உயர் நிலைக்கு வர வழிவகுக்கும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே!

பொதுவாக உங்கள் அழகுணர்வு மற்றும் கவர்ச்சியான பேச்சுத்திறன் தங்களை மற்றவர்களிடமிருந்து ஈர்க்கச் செய்கிறது.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்கள்

உத்யோகத்தில் அமைதி நிலவும். நேரடி அதிகாரி உங்களுக்கு உதவாவிட்டாலும் அதற்கு மேலுள்ள அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

வியாபாரிகள்

வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். கோபப்பட்டால் தங்களுக்குத்தான் நஷ்டம்.

குடும்பத் தலைவிகள்

குடும்ப நிர்வாகத்தை பொறுத்தவரை உங்கள் சிறப்பான நடவடிக்கைகள் நற்பெயரைப் பெற்றுத் தரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்வீர்கள்.

கலைஞர்கள்

தாங்கள் நினைத்தப்படியே பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். பலப் பல படங்கள் ஒப்பந்தம் ஆகும். ஒப்பந்தம் செய்த படங்கள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து முடித்து விடுவீர்கள்.

மாணவர்கள்

மாணவர்கள் நன்கு படிப்பர். கல்வி நிறுவனங்கள் மூலமாக சுற்றுலா சென்று வரும் வாய்ப்பும் கிட்டும்.சுற்றுலா செல்லும் போது தங்கள் உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது.

பரிகாரம்

குரு பகவானுக்கு வியாழன் தோறும் சென்று அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே!

தங்கள் மனம் அடிக்கடி அலைபாயும். ஆதலால், நவீன மாறுதல்களை ஏற்று நடப்பவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகதர்கள்

அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உத்யோகத்தில் பெரும் பிரச்சினைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் கடின உழைப்புத் தேவைப்டும்.

வியாபாரிகள்

இரும்பு வியாபாரிகள் தாங்கள் அதிக முதல் போடுவதை தவிர்ப்பது நல்லது. பொருட்கள் விற்ற பின் தொழிலில் முதல் போடுவது நஷ்டத்தை தவிர்க்க இயலும்.

குடும்பத் தலைவிகள்

வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், விருந்தினர் வருகை ஏற்பட்டு செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் தங்கள் சிக்கன நடவடிக்கைகளால் தங்கள் கணவனின் மனதில் நீங்கா இடம் பெறுவீர்கள்.

கலைஞர்கள்

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.

மாணவர்கள்

சக மாணவர்களுடன் வம்பு, வழக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் நட்புணர்வுடன் பழகி வர முயலுவது உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.

பரிகாரம்

சனி பகவானுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது எள் சாதம் செய்து சாமிக்கு படைத்து கோவிலில் உள்ள வயதானவர்களுக்கு கொடுத்து வருவதால் உங்கள் குடும்பத்தில் தடைப்பட்டிருந்த காரியங்கள் யாவும் நிச்சயம் நடைபெற வாய்ப்புண்டு.