மாத ராசிபலன்

மார்ச் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான மார்ச் மாத பலன்களை பார்ப்போம்.

மார்ச் மாதப்பலன்கள்

தனுசு

தனுசு ராசி அன்பர்களே!

ரகசியம் காக்கும் திறன் கொண்டவர் நீங்கள். மற்றவர்களுக்கு வாக்கு கொடுத்தால் மீறாதவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்கள்

உத்யோகஸ்தர்கள் தங்கள் சக ஊழியர்களிடம் தங்கள் குடும்ப பிரச்சினைகளை சொல்ல வேண்டாம், அவர்களுடன் அளவோடு பழகுவது நல்லது. மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அவர்கள் தங்களுக்கு நற்பொறுப்பினை தருவர்.

வியாபாரிகள்

உங்கள் முதலீட்டுக்குத் தேவையான தொகையைப் பெற முயற்சி செய்தால் வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். அந்த முதலீட்டால் லாபம் இரட்டிப்பாகும்.

குடும்பத் தலைவிகள்

வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான நவ நாகரிகப் பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள்.இந்த மாதம் உங்கள் கனவு பலிக்கும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் தங்கள் சக நடிகர்களுடன் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பழகுவது நல்லது. எதிர்பாலினரிடத்தில் அதிக நெருக்கம் வேண்டாம். உங்கள் உழைப்பினை போட்டால் தாங்கள் அதற்கேற்ற பலன் தாமதமானாலும் கிடைக்கும்.

மாணவர்கள்

கல்லூரி மற்றும் பள்ளிச் சுற்றுலா செல்லும் போது நீர் நிலைகளின் அருகில் செல்லாமல் இருப்பது அவசியம். கொஞ்சம் பயம் எப்பொழுதும் இருப்பது நல்லது. அஜாக்கிரதையுடன் பயணம் செய்ய வேண்டாம்.

பரிகாரம்

கை, கால் முடமானவர்களுக்கு உதவுதல் மற்றும் அவ்வப்போது வயது முதிர்ந்த பெரியவர்களை வணங்கி அவர்களின் நல்ஆசிகளைப் பெறுவதும் நல்லது.

மகரம்

மகர ராசி அன்பர்களே!

எள் என்றால் எண்ணெயாய் நிற்பவர் நீங்கள். சுறுசுறுப்புடன் செயல்படுபவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்கள்

மேலதிகாரிகளிடம் அமைதியாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. தேவையற்ற விசயங்களில் அனாவசியமாக தலையிடும் உங்கள் போக்கை தவிர்ப்பது அவசியம்.

வியாபாரிகள்

வெளியூர் வியாபாரத்திற்காக அடிக்கடி செல்பவர்கள் பயணத்தின்போது தங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் எடுத்துச் செல்வது நல்லது.

குடும்பத் தலைவிகள்

தங்கள் குடும்பத்தை பராமரிப்பதில் உங்கள் நிர்வாகத்திறமைப் பளிச்சிடும். மாமியார் மருமகள் உறவு சமாதானமாக செல்லும். மற்றபடி வீடு கட்டும் திட்டம் நிறைவேறும்.

கலைஞர்கள்

வெளியூர் பயணங்கள் அடிக்கடி ஏற்பட இடமுண்டு. அங்கு தங்கள் உடைமைகளான செல்போன் போன்ற பொருட்களில் கவனம் தேவை. உங்கள் திறமையை முழுமையாக வெளிபடுத்தக்கூடிய வாய்ப்பு தேடி வரும்.

மாணவர்கள்

நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றிறாமல் அன்றாட பாடங்களை அன்றன்றே படித்து வந்தால் மட்டுமே தேர்வுகளில் வெற்றி வாகையை சூடலாம்.

பரிகாரம்

குல தெய்வ வழிபாட்டில் அக்கறை செலுத்துங்கள். அனாதை இல்லங்கள் முதியோர் காப்பகங்களுக்கு முடிந்த அளவிற்கு உதவுங்கள். முடிந்தால் அனுதினமும் சண்முக கவசம் படித்து வருவதும் பல நன்மைகளைப் பெற உதவும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே!

இன, மத பாகுபாடின்றி பழகும் குணமுள்ளவர் நீங்கள். அன்பே குலம் என்று போற்றுபவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்கள்

உத்யோகதர்களுக்கு இதுவரை மறுத்து வந்த மேலிடத்திலிருந்து பதவி உயர்வுக்கான உத்தரவு இப்போது உங்களை தேடி வரும். இனி கவலை வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவும் கிட்டும்.

வியாபாரிகள்

தங்களுக்கு சோதனைகள் மறைந்து அவையாவும் சாதனையாக மாறக்கூடியகாலமாதலால் வியாபாரத்தில் மற்ற போட்டியாளர்கள் பலரும் மூக்கில் விரல் வைத்து வேர்க்கும் வகையில் வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பீர்கள்.

குடும்பத் தலைவிகள்

கைத்தொழில் உங்கள் குடும்பத் தேவைகளுக்கு உறுதுணையாக இருக்கும். ஆதலால், நீங்கள் தங்களுடைய தனித்திறமையை பயன்படுத்தி அதாவது, டைலரிங், அழகு நிலையங்கள் மற்ற மற்ற சுயதொழிலை ஆரம்பித்து லாபத்தை ஈட்டுவீர்கள்.

கலைஞர்கள்

உங்கள் பெருமைகளையும் திறமைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் வகையில் பல்வேறு சிறப்பான வாய்ப்புகள் இந்த மாத காலகட்டத்தில் மிக அதிகமாக இருக்கும்.

மாணவர்கள்

மாணவர்கள் படிப்பில் அதிகமான அக்கறையுடன் திரும்பத் திரும்ப எழுதி பார்த்தால்தான் தாங்கள் தங்கள் இலக்கினை எட்ட இயலும். இவ்வாறு செய்தால் அதிக மதிப்பெண்களுடன் தங்களுக்குப் பிடித்த துறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

பரிகாரம்

கீழ் வரும் சனி காயத்ரி மந்திரத்தையாவது சொல்வது தங்களுக்கு பல ஆபத்துகளில் இருந்து தப்பலாம்.

சனியின் காயத்ரி மந்திரம்

காகத் வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்தஹ ப்ரசோதயாத்

என்ற மந்திரத்தை சனி பகவான் காயத்ரி மந்திரத்தை மனதிலேயே பாராயணம் செய்வது நல்லது. வீட்டிலேயே சனி கிழமை தோறும் ஒன்பது முறையாவது சொல்லி வழிபடுவது நலம்.

மீனம்

மீன ராசி அன்பர்களே!

தங்களை நம்பியவரை கைவிடாதவர் நீங்கள். சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் கொண்டவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்கள்

உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் நினைத்த அலுவலகத்திற்கு இடமாற்றம் ஏற்படும். இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு ஊருகளில் பணிபுரிய நேரலாம். வீட்டை விட்டு பிரிகிறோமே என்ற வருத்தத்தை தவிர்க்கவும்.

வியாபாரிகள்

வியாபாரிகளுக்கு: சுய தொழிலாக இருந்தாலும், கூட்டுத் தொழிலாக இருந்தாலும் சற்று கவனம் தேவை. வியாபாரம் நிமித்தமாக வெளிநாடு அல்லது வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

குடும்பத் தலைவிகள்

குடும்ப நிர்வாகத்தைத் திறம்பட நடத்தி நற்பெயர் பெறுவீர்கள். கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள்.

கலைஞர்கள்

குறிப்பாக கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான காலம் இது. இதனை நன்கு பயன்படுத்தி பணமும் புகழும் பெற முற்படுங்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரக் கூடிய காலமிது.

மாணவர்கள்

மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். சுற்றுலாக்களுக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போது நீர் நிலைகளில் குளிக்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்

கீழ் வரும் பிள்ளையாரின் மந்திரத்தை ஒன்பது முறை படியுங்கள். சனியால் வரும் கெடுபலன்களை குறைக்க வல்லது.

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா

ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே

ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா

ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா