இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் (02.04.2026): நினைத்த காரியம் வெற்றி பெறும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: வியாழன் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: பங்குனி

நாள்: 19

ஆங்கில தேதி: 2

மாதம்: ஏப்ரல்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று மாலை 05-46 வரை அஸ்தம் பின்பு சித்திரை

திதி: இன்று காலை 07-57 வரை பௌர்ணமி பின்பு பிரதமை

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 10-30 to 11-30

நல்ல நேரம்: மாலை 12-30 to 01-30

ராகு காலம்: பிற்பகல் 1-30 to 3-00

எமகண்டம்: காலை 6-00 to 07-30

குளிகை: காலை 09-00 to 10-30

கௌரி நல்ல நேரம்: காலை -

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 07-30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கு இடமுண்டு. நினைத்த காரியம் வெற்றி பெறும். தொழில் முனையும் பெண்களுக்கு இடம் வாங்கும் முயற்சி பலிக்கும். கணவர் வழியில் உதவிகள் உண்டு. இளம்பெண்களுக்கு காதல் கசக்கும். குழந்தைகளால் அன்பு தொல்லை உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

ரிஷபம்

உணவு விசயத்தில் கவனம் தேவை. கணவரிடம் வாக்குவாதம் வேண்டாம். பெண்களின் புதிய முயற்சிகள் பலிக்கும். சமூகத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கூடும். நட்புகள் தானே வந்து நட்பு பாராட்டுவர். பிரிந்திருந்த காதலர்கள் ஒன்று சேருவர். பணவரவுக்கு பஞ்சமில்லை. பிள்ளைகளின் ஆதரவு மிகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

கலைஞர்களுக்கு சம்பளம் கூடும். உத்யோகஸ்தர்கள் தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள் . பெண் உத்யோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நலம் தரும். தங்கள் பிள்ளைகளால் நன்மை கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

கடகம்

குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுவீர்கள். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். தாயார் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை

சிம்மம்

அதிக விற்பனைக்காக மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையிடம் அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய நட்பினர் உதவுவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணம் நன்மையளிக்கும். தேவையற்ற பயம் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

வியாபாரத்தில் வரவு செலவுகளை சரிபார்ப்பது நல்லது. காதலர்களிடம் ஊடல்கள் வந்து போகும். பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். பிரபலங்களின் தொடர்பு பயன் தரும். இருசக்கர வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். அரசியலில் ஈடுபாடு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

துலாம்

பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவீர்கள். தம்பதிகள் மனம் விட்டு பேசுவர். இணையதள வியாபாரம் லாபம் தரும். புதிய நட்பு கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் தோன்றும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். பெண்களுக்கு நல்ல வரண் அமையும். தொலை தூர தொடர்பில் லாபம் உண்டு. புதிய தொழில் துவங்குவீர்கள். கணவர் வீட்டு உறவு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

பிள்ளைகளுக்காக வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும்.

குறுகிய பயணம் மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு நிரந்தரப்பணி கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டினை பெறுவீர்கள். சமையலில் ஆர்வம் கூடும். உடல் நலம் சிறப்பாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். அரசியல்வாதிகள் பொது கூட்டங்களுக்காக வெளியூர் செல்வீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். வழக்குகள் தள்ளிப் போகும். திருமணப் பேச்சு பலன் தரும். மேற்படிப்பிற்கு ஆயத்தம் ஆவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கும்பம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

மீனம்

வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். எடுத்த காரியம் எளிதில் முடியும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பொது நல சேவை கூடும். மூலிகை மருத்துவத்தில் மனம் நாடும். மாமியாரின் உறவு சுமூகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் நன்கு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு