கிழமை: வெள்ளிக் கிழமை
தமிழ் வருடம்: பரபாவ
தமிழ் மாதம்: வைகாசி
நாள்: 1
ஆங்கில தேதி: 15
மாதம்: மே
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று மாலை 06-57 வரை அஸ்வினி பின்பு பரணி
திதி: இன்று காலை 06-25 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி
யோகம்: அமிர்த, சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 09-30 to 10-30
நல்ல நேரம்: மாலை 05-00 to 6-00
ராகு காலம்: காலை 10-30 to 12-00
எமகண்டம்: மாலை 3-00 to 4-30
குளிகை: காலை 07-30 to 09-00
கௌரி நல்ல நேரம்: காலை 12-30 to 1-30
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை
மேஷம்
கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். பங்குச் சந்தைகளில் லாபம் பெறுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அரசியல்வாதிகள் நாவடக்கமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பேச்சினால் விளைவுகளை சந்திப்பீர்கள். பொறுமை அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
ரிஷபம்
குடும்பத் தலைவிகள் சிக்கனத்தை கடைபிடிப்பர். காதல் கண்சிமிட்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வலிய வந்து பேசுவர். மகன் மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். அரசு தொடர்பான காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மிதுனம்
பதவி உயர்வு பற்றி செய்திகள் வரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பண வரவு இனி அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் தோன்றும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கடகம்
புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்யம் உண்டு. நண்பர்களுடன் நீண்ட தூர ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். உங்களுக்கு உரிய பங்குத் தொகை வந்து சேரும். சோர்வாக இருந்தவர்களுக்கு இனி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
சிம்மம்
கர்ப்பிணிகள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. உடல் நலத்தை பார்த்துக் கொள்வது நல்லது. வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும். புரமோஷன், டிரான்ஸ்பருக்கு வாய்ப்பு உள்ளது. புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
கன்னி
இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
துலாம்
பயணங்களில் லாபம் உண்டு. வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். தம்பதிகளிடையே அன்பு பெருகும். தங்கள் தோழிகளிடம் பெண்கள் மனம்விட்டு பேச நேரம் கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். சுப காரியங்கள் நடைபெறும். சமூகத்தில் மதிப்பு உயரும். உடல்நலம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
விருச்சிகம்
பிள்ளைச் செல்வம் இல்லாத குறை உங்களை பெரிதும் பாதித்ததே, இனி கவலை வேண்டாம் அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். கலைஞர்களுக்கு உற்சாகம் கூடும் நாள். பெரிய பேனர்களிலிருந்து அழைப்பு வரும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. உயர் பதவியும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வயிறு உபாதை இருக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். காதலர்கள் தங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். மாணவர்களுக்கு அதிகம் மதிப்பெண் பெற வேண்டும் என்றால் இன்னும் முயற்சி தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
குடும்பத் தலைவிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். முன்பிருந்ததை விட ஆரோக்கியம் மேம்படும். வாகனம் பழுதடையும், அதை சரி செய்வீர்கள். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். வியாபாரிகளுக்கு நல்ல விற்பனை உண்டு. எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கும்பம்
பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். வியாபாரிகள் அரசு வகையில் ஆதாயபலன் பெறுவர். தொழிலதிபர்கள் தொழிலில் புதிய நவீன நுட்பத்தை கையாள்வர். தம்பதிகளிடையே வாக்குவாதம் வந்துபோகும். உடல்நிலை எப்போதும் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மீனம்
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். தம்பதிகளிடையே அன்பு பெருகும். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். உடல் நலத்தில் முன்னேற்றம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு