இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் (17.05.2026): நினைத்த காரியம் நிறைவேறும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: ஞாயிறு கிழமை

தமிழ் வருடம்: பரபாவ

தமிழ் மாதம்: வைகாசி

நாள்: 3

ஆங்கில தேதி: 17

மாதம்: மே

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று மாலை 04-01 வரை கிருத்திகை பின்பு ரோகிணி

திதி: இன்று அதிகாலை 02-09 வரை அமாவாசை இரவு 11 45 வரை பிரதமை,பின்பு துவிதியை.

யோகம்: சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம்: காலை 08-15 to 9-00

நல்ல நேரம்: மாலை 3-30 to 4-30

ராகு காலம்: மாலை 4-30 to 6-00

எமகண்டம்: காலை 12-00 to 1-30

குளிகை: காலை 3-00 to 4-30

கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30

கௌரி நல்ல நேரம்: மாலை 1-30 to 2-30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

புதிய தொழில் துவங்குவர். புதுமண தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவர். அதற்குண்டான வேலைகளை இன்று ஆரம்பிப்பர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

ரிஷபம்

உறவினர்களால் நன்மை உண்டு. வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர். அரசியலில் நாட்டம் கூடும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். முகம் புதுப்பொலிவு கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மிதுனம்

சில்லரை வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். மாணவர்கள் வேற்று மொழியினைக் கற்க ஆர்வம் கொள்வர். முயற்சி செய்த காரியம் முடியும் வரை வெளியிடாமல் இருப்பது நல்லது. ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

கடகம்

நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். சேமிப்புத் திட்டத்தில் இணைவீர்கள். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். பண வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீர்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

சிம்மம்

சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். உடல் வலிமை உண்டாகும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் நலம் சரியாகும். பணப்பொறுப்புக்களை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். விற்க முடியாத காலி மனையை தேடி வாடிக்கையாளர்கள் வருவர். ஒரு சிலருக்கு புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

துலாம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வீர்கள். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். விருந்தினர் வந்து போவர். உடல் நலம் சிறப்பாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

தனுசு

உத்யோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்குரிய பங்குத் தொகை வந்து சேரும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மகரம்

உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை பத்திரமாக கையாளுங்கள். நினைத்த காரியம் நிறைவேறும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வீட்டில் சுபகாரியம் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர்.பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். திருமணம் கோலாகரமாக நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

பழைய கடன்கள் அடைபடும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரிகள் சுபிட்சம் காண்பர். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை